இரகசிய பொலிஸின் பணிப்பாளராக செயற்பட்ட தன்னை குறித்த பதவியில் இருந்து இடமாற்ற பதில் பொலிஸ் மா அபதிர் எடுத்த தீர்மானத்தின் ஊடாக தனது அடிப்படை உரிமைகள் மீறப்படுவதாக தீர்மானித்து தனது இடமாற்றத்தை வலுவிழக்கச் செய்யுமாறு கோரி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகரவால் உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனுவின் பிரதிவாதிகளாக பதில் பொலிஸ் மா அபதிர் சி.டீ.விக்கிரமரத்ன, கட்டாய விடுமுறையில் உள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் அந்த ஆணைக்குழுவின் உறுப்பினர்கள், தேசிய தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் உள்ளிட்டவர்கள் பெயரிடப்பட்டுள்ளனர்.

கடந்த நவம்பர் மாதம் 21 ஆம் திகதி தன்னை இரகசிய பொலிஸின் பணிப்பாளர் பதவியில் இருந்து காலி பிரதி பொலிஸ் மா அதிபரின் தனிப்பட்ட உதவியாளராக இடமாற்றியுள்ளதாக, பதில் பொலிஸ் மா அதிபர் தொலைப்பேசி அழைப்பின் ஊடாக அறிவித்ததாக மனுதாரர் ஷானி அபேசேகர குறிப்பிட்டுள்ளார்.

இது சாதாரண இடமாற்ற நடைமுறையை மீறும் வகையில் தன்னிச்சையாக மேற்கொள்ளப்பட்ட இடமாற்றம் என அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்