அரை சொகுசு பஸ் சேவைகளை தடைச் செய்வதற்கான சகல ஏற்பாடுகளும் தயாரென போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது.இது தொடர்பாக பல தரப்புக்களுடனும் போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர  பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் இந்த பஸ் சேவைகள் தொடர்பாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு  10 க்கும் மேற்பட்டோரை உள்வாங்கி மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் ஆய்வில் 100 வீதம் இந்த சேவை இரத்துச் செய்ய வேண்டும் என்ற கருத்துகளே பெறப்பட்டுள்ளதாகவும் அறிய முடிகிறது