மட்டக்களப்பு மாவடி பிரதேசத்தில் திடீ​ர் வௌ்ளப்பெருக்கில் சிக்குண்ட 21 ஹெலிகொப்டர் மூலம் மீட்கும் பணிகளை இராணுவத்தினர் ஆரம்பித்துள்ளனர். அனர்த்த முகாமைத்து திணைக்களத்தின் கோரிக்கைக்கு அமைய  212 பெல் என்ற இராணுவத்துக்கு சொந்தமான ஹெலிகொப்டர் மூலம் இவர்கள் மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இவ்வாறு மீட்கப்பட்டவர்களின் உணவுத் தேவை, முதலுவதிகளை வழங்குதற்கான கடற்படையின் உயிர்பாதுகாப்பு கு​ழுவொன்று குறித்த பிரசேத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பேச்சாளர் பிரதீப் கொடிபிலி தெரிவித்துள்ளார்