வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள நாசிவந்தீவு ஆற்றுவாயில் வைத்து பலத்த காற்றின் காரணமாக இரண்டு படகுகள் நீரில் கவிழ்ந்தமையால் சேதமடைந்துள்ளது.கல்முனை சாய்ந்தமருத்தினை சேர்ந்த இரண்டு மீனவர்களின் குறித்த படகுகள் கடலில் இருந்து வாழைச்சேனை பகுதியில் கட்டுவதற்கு கொண்டு வந்த போது பலத்த காற்றின் காரணமாக படகு நீரில் கவிழ்ந்துள்ளது.

இரண்டு படகு கவிழ்ந்தமையால் படகில் பயணித்த எட்டு மீனவர்கள் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளனர்.

உடனடியாக பெக்கோ இயந்திரம் மூலம் இரண்டு படகுகளும் கரைக்கு இழுந்து வரப்பட்ட போது இரண்டு படகும் முற்றாக சேதமடைந்துள்ளதாக படகில் பயணித்தவர்கள் தெரிவித்தனர்.

கல்முனை சாய்ந்தமருது பகுதியில் நவம்பர், டிசம்பர் மாதங்களில் படகுகளை கடற்கரையில் கட்டுவது கஸ்டமான நிலை காணப்படுவதால் கல்முனை சாய்ந்தமருது பகுதி மீனவர்கள் தங்களது படகுகளை வாழைச்சேனை பகுதியில் கட்டுவதற்கு வருகை தருகின்றது.

எனவே தங்களது படகுகளை வாழைச்சேனை பகுதியில் கட்டுவதற்கு வருகை தரும் போது நாசிவந்தீவு ஆற்றுவாயில் வைத்து பலத்த காற்றின் காரணமாக இரண்டு படகுகள் நீரில் கவிழ்ந்து சேதமடைந்து காணப்படுகின்றது.

எமது கல்முனை சாய்ந்தமருது பகுதியில் நவம்பர், டிசம்பர் மாதங்களில் படகுகளை கடற்கரையில் கட்டுவது கஷ்டமான நிலை காணப்படுவதை நிவர்த்தி செய்யும் வகையிலும், இதற்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் வகையிலும் அரசியல்வாதிகள், அரச அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள முன்வருமாறு மீனவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.