ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் மத்தியகுழுக் கூட்டம் கட்சியின் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களது தலைமையில் இன்று (22.12.2019) ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10.30 மணிமுதல் பிற்பகல் 2.00 மணிவரை வவுனியாவில் நடைபெற்றது.இதன்போது கட்சியின் இன்றைய அரசியல் நிலைமைகள், எதிர்கால செயற்பாடுகள், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடுகள், நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தல், எதிர்வரும் பாராளுமன்ற தேர்தல் என்பன குறித்து கட்சியின் தலைவர் த.சித்தார்த்தன் அவர்கள் விளக்கிக் கூறினார்.

இதன்போது கூட்டத்தில் கலந்து கொண்ட கட்சியின் மத்தியகுழு உறுப்பினர்கள் கட்சியின் செயற்பாடுகள் குறித்து தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்கள்.

மேற்படி கூட்டத்தில் கட்சியின் தலைவர் த.சித்தார்த்தன், செயலாளர் சு.சதானந்தம், பொருளாளர் க.சிவநேசன், உப தலைவர்கள் ஜி.ரி. லிங்கநாதன், வே.நல்லநாதர், பொ.செல்லத்துரை மற்றும் வடக்கு கிழக்கின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் கட்சியின் மத்தியகுழு உறுப்பினர்கள் கலந்துகொண்டிருந்தார்கள்.