மட்டக்களப்பு – வவுணதீவு பிரதேசத்திலுள்ள நெடியமடு கிராமத்தில், பாம்பு தீண்டியதால் 10 வயதுச் சிறுமி பலியாகியுள்ளார்.உன்னிச்சை 6ஆம் கட்டை பாடசாலையில் தரம் 5இல் கல்வி பயிலும், கேசவமூர்த்தி மதுசினி எனும் சிறுமியே, இவ்வாறு உயிரிழந்தவராவார்.
பாம்புக் கடிக்குள்ளான சிறுமி, மயக்கமான நிலையில் வாந்தி எடுத்ததன் பின்னர் உயிரிழந்துள்ளார்.
பாம்புக் கடிக்குள்ளான சிறுமி முன்னதாக, கரடியனாறு வைத்தியசாலைக்கு கொண்டு செயல்லப்பட்டு, பின்னர் செங்கலடி பிரதேச வைத்தியசாலையில் உடற் கூறாய்வுப் பரிசோதனை செய்யப்பட்டு, சடலம், பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டதுடன், இன்று (22) அடக்கம் செய்யப்பட்டது.