கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை நோக்கி இன்று புறப்படவிருந்த ரயில்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன.இன்று மாலை மற்றும் இரவு பயணிக்கவிருந்த ரயில் சேவைகளே இரத்துச்செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிக மழையுடன் கூடிய காலநிலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள அபாயத்தை கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.