பாராளுமன்ற உறுப்பினர் பாட்டளி சம்பிக்க ரணவக்க கைது செய்யப்பட்டமை தொடர்பில் அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறு பதில் பொலிஸ் மா அதிபரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி பொலிஸ் ஆணைக்குழுவிற்கு கடந்த வௌ்ளிக்கிழமை எழுத்து மூலம் அனுப்பிய கடிதத்திற்கு அமைவாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதன் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை கைது செய்யும் போது கடைப்பிடிக்க வேண்டிய சம்பிரதாய முறையினை பொலிஸ் குற்றவியல் பிரிவினர் கடைப்பிடிக்கப்படவில்லை என குறித்த கடித்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி, பொலிஸ் ஆணைக்குழுவின் நிலைப்பாட்டை அறிவிப்பதற்கு முன்னர் பதில் பொலிஸ் மா அதிபரிடம் அது தொடர்பில் அறிக்கை ஒன்றை கோரியுள்ளதாக பொலிஸ் ஆணைக்குழுவின் பேச்சாளர் தெரிவித்தார்.