அரச நிறுவனங்கள் சிலவற்றுக்கான புதிய தலைவர்கள் சிலர் நியமிக்கப்பட்டுள்ளனர்.அரசு நிறுவனங்களுக்கான புதிய தலைவர்கள் மற்றும் பணிப்பாளர் சபைக்கான உறுப்பினர்களை நியமிப்பது குறித்த பரிந்துரைகளை வழங்க 6 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது.

இந்த குழுவின் பரிந்துரைக்கு அமைவாகவே இவ்வாறு அரச நிறுவனங்களுக்கான தலைவர்கள் சிலர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சிரேஷ்ட அரச உத்தியோகத்தர் சுமித் அபேசிங்க இந்த குழுவின் தலைவராக செயற்படுகின்றார்.

அதற்கமைய நியமிக்கப்பட்டுள்ள புதிய தலைவர்கள் தொடர்பான பெயர் பட்டியலை ஜனாதிபதி செயலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி குறித்த நியமனங்கள் தொடர்பான வேட்பு மனுக்களை ஏற்கும் பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளதால் அதற்கமைய ஜனாதிபதி செயலாளர் பி.பீ. ஜயசுந்தர அனைத்து அரசு நிறுவனங்களுக்கும் எதிர்வரும் 31 ஆம் திகதிக்கு முன்னர் வேட்பு மனுக்களை சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.

அதேபோல் அரச மருந்தாக்கல் கூட்டுதாபனத்தின் புதிய தலைவராக விசேட வைத்திய அதிகாரி பிரசன்ன குணசேன நியமிக்கப்பட்டுள்ளதுடன் அரச மருந்து தயாரிப்பு கூட்டுதாபனத்தின் புதிய தலைவராக உப்பல இந்ரவங்ச நியமிக்கப்பட்டுள்ளார்.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் புதிய தலைவராக கமல் ரத்வத்த நியமிக்கப்பட்டுள்ளதுடன், இலங்கை தேயிலை சபையின் புதிய தலைவராக ஜயம்பதி மொல்லிகொட இதற்கு முன்னர் நியமிக்கப்பட்டிருந்தார்.