வட மாகாண ஆளுநராக சுகாதார அமைச்சின் செயலாளர் திருமதி. பி.எஸ்.எம். சாள்ஸ் நியமிக்கப்படவுள்ளார்.தகவல், தொடர்பாடல் தொழிநுட்பம், உயர்கல்வி, தொழிநுட்ப புத்தாக்க அமைச்சர் பந்துல குணவர்தன இதனை இன்று காலை தெரிவித்தார்.

இவரது நியமனம் குறித்து நடைபெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தின் போது தீர்மானம் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

இவருக்கு தற்பொழுது 60 வயது பூர்த்தியாகவுள்ளது. இந்த நிலையின் அவரை ஆளுநராக நியமிப்பது குறித்து அமைச்சரிடம் கேட்டபோது இவரை ஆளுநராக நியமிப்பது தொடர்பிலான ஆவண பத்திரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டு அதற்கான அங்கீகாரம் பெறப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

அமைச்சரவை கூட்டம் இம்முறை ஜனவரி மாதம் 2 ஆம் திகதி நடைபெறவுள்ளது. அதில் இவரது நியமனம் தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் மேலும் தெவிரித்தார்.

இந்த வாரத்தில் நத்தார் தின விடுமுறை இடம்பெறுவதனால் அமைச்சரவை கூட்டம் எதிர்வரும் 2 ஆம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(அரசாங்க தகவல் திணைக்களம்)