கிளிநொச்சி, பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக முகாமைத்துவ உதவியாளரும் கிளிநொச்சி முருகானந்த கல்லூரி பளைய மாணவனுமான

ரவிச்சந்திரன் ரிதுசன் (வயது 24) என்பவர் முரசுமோட்டை இரண்டாம் கட்டை பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் இன்று பிற்பகல் 2 மணியளவில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். வேலைகளுக்காக குடும்பத்தினர் வெளியில் சென்று 2 மணியளவில் வீடு திரும்பியபோதே வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.