கிளிநொச்சி மாவட்ட சமூகமட்ட அமைப்புக்களின் சம்மேளனப் பிரதிநிதிகளுக்கும், புளொட் தலைவரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களுக்குமிடையிலான சந்திப்பொன்று நேற்றுமாலை கிளிநொச்சி ஆனந்தபுரத்தில் இடம்பெற்றது.

இக்கூட்டத்தில் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் யாழ். மாவட்ட அமைப்பாளரும், முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான பா.கஜதீபன், கட்சியின் கிளிநொச்சி மாவட்ட மத்தியகுழு உறுப்பினர் வே.சிவபாலசுப்பிரமணியம், கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் க.சுமன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தார்கள். இதன்போது கிளிநொச்சி மாவட்ட மக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் தொடர்பாகவும், சட்டவிரோத மணல் அகழ்வு மற்றும் வெள்ள அனர்த்தம் தொடர்பாகவும் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.