வேலைக்குச் சென்ற குடும்பஸ்தர் மயக்கமடைந்து உயிரிழந்துள்ளார். இச் சம்பவத்தில் மானிப்பாய் நவாலி வடக்கைச் சேர்ந்த சண்முகராஜா அம்பிகைபாலன் (வயது 64) என்ற குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளார்.

கடந்த சனிக்கிழமை காய்ச்சல் காரணமாக தனியார் வைத்தியசாலையில் மருந்து எடுத்து குணமாகிய நிலையில் ஞாயிற்றுக்கிழமை வேலைக்குச் சென்ற இடத்தில் மயக்கமடைந்துள்ளார். மயக்கமடைந்தவரை யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசென்ற போது குறித்த நபர் முன்னரே இறந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.