வவுனியாவில் தூக்கில் தொங்கிய நிலையில் வயோதிபப் பெண்ணொருவர் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

வவுனியா – வைரவபுளியங்குளம் பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து இன்று காலை குறித்த பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த பெண் தனது சகோதரனின் வீட்டில் வசித்து வந்துள்ளதுடன், வீட்டினுள் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக இருப்பதனை அவரது சகோதரன் அவதானித்துள்ளார். இதன் பின்னர் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலையடுத்து பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர். 75 வயதுடைய பொன்னம்பலம் செல்லம்மா என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.