யாழ். குருநகர் ஆழ்கடல் சுழிக்குள் சிக்குண்டு இன்று அதிகாலை ஒரு பிள்ளையின் தந்தையான மீனவர் உயிரிழந்துள்ளார். சாவக்காட்டு பகுதியைச் சேர்ந்த வடிவேல் வரதன் (வயது 31) என்பவரே உயிரிழந்துள்ளார்.

இவருடன் மேலும் ஐந்து மீனவர்கள் இன்று காலை கடலில் வலைவீசச் சென்றுள்ளனர். அதன்போது, இவர் ஆழ்கடலில் சுழி ஓடி வலை வீசியுள்ளார். ஏனையவர்களும் அருகில் வலை போட்டுக்கொண்டிருந்துள்ளனர். சுமார் 10 நிமிடங்கள் வரை இவரைக் காணாததால் ஏனைய மீனவர்கள் தேடியுள்ளனர். அப்போது, சுழி இழுத்து, இறந்த நிலையில் மிதந்தபோது கண்டு யாழ் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதுடன், சடலத்தை யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசென்றுள்ளனர்.