வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளால் எதிர்வரும் 30ஆம் திகதி மாபெரும் கவயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட உள்ளது.

கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் முன்றலில் காலை 10 மணிக்கு இப்போராட்டம் நடத்தப்படுமென வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.இவ் மாபெரும் மக்கள் எழுச்சிப் பேரணிக்கு மத, சிவில், சமூக மற்றும் கட்சி பிரதிகள் மற்றும் பொதுமக்கள் என அனைவரையும் எவ்வித பேதங்களுமின்றி பங்கெடுத்து போராட்டத்திற்கு வலுச் சேர்க்குமாறு அன்புரிமையோடு அழைப்பதாக சங்கத்தினர் மேலும் அறிவித்துள்ளனர்.