வவுனியா போகஸ்வௌ இராணுவ முகாமுக்கு அருகில் இனந்தெரியாதவரால் பறித்துச்செல்லப்பட்ட இராணுவ வீரரின் துப்பாக்கி கெக்கிராவைப் பகுதியில் மீட்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்டவர் இராணுவத்திலிருந்து தப்பிச்சென்றவர் என கூறப்படுகிறது. இராணுவ முகாமின் காவலரணில் கடமையில் ஈடுபட்டிருந்த இராணுவ வீரர், இன்று அதிகாலை பணி முடிந்து சென்றுகொண்டிருந்தபோது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு துப்பாக்கி பறித்துச்செல்லப்பட்டிருந்தது.

காயமடைந்த இராணுவ வீரர் அநுராதபுரம் இராணுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், பொலிஸார் மற்றும் இராணுவ பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

இந்த நிலையிலேயே, குறித்த துப்பாக்கி கெக்கிராவ பகுதியில் கைப்பற்றப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.