ஆழிப்பேரலையால் உயிரிழந்த மக்களை நினைவு கூறும் வகையில் நாளை இரண்டு நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்துமாறு பொது மக்களிடம் கோரப்பட்டுள்ளது.

இதற்கமைய நாளை காலை 9.25 முதல் 9.27 வரை மௌன அஞ்சலி செலுத்துமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் பொது மக்களிடம் கோரியுள்ளது. கடந்த 2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26 ஆம் திகதி ஆழிப்பேரலை அனர்த்தம் இடம்பெற்று நாளையுடன் 15 வருடங்கள் பூர்த்தியாகிறது. இந்த ஆழிப்பேரலை அனர்த்தத்தால் உயிரிழந்தவர்களை நினைவு கூறுவதற்கான் பிரதான சமய நிகழ்வு ஹிக்கடுவை – தெல்வத்தை – பெரேலியவில் உள்ள சுனாமி நினைவு சின்னத்திற்கு அருகில் நாளை இடம்பெறவுள்ளது.