Header image alt text

சுனாமி ஆழிப்பேரலை ஏற்பட்டு இன்றுடன் பதினைந்து ஆண்டுகள் நிறைவடைகின்றன. 2004ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ம்திகதி ஏற்பட்ட சுனாமிப்பேரலை காரணமாக இலங்கையில் 40ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களின் உயிர்கள் காவுகொள்ளப்பட்டன.

இந்தோனேசியாவின் சுமாத்திரா தீவுகளின் ஆழ்கடலில் ஏற்பட்ட நிலநடுக்கம் 9.0 ரிச்டர் அளவில் பதிவாகியதுடன், இந்தப் பூமியதிர்ச்சி கடலில் நூற்றுக்கணக்கான அடி உயரத்தில் அசுர அலைகளை உருவாக்கியது. இலங்கையில் முதலில் கல்முனையைத் தாக்கிய பேரலை குறுகிய நேரத்திற்குள் திருமலை, மட்டக்களப்பு, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை உள்ளிட்ட 14 கரையோர மாவட்டங்களை தாக்கியது. Read more

‘ஒரே நாடு, மூன்று மொழிகள்’ என்ற அடிப்படையில் இந்த நாட்டை ஒன்று சேர்த்து, சிங்கள, தமிழ், முஸ்லிம் அடிப்படைவாத, பிரிவினைவாதிகளை தோற்கடிக்கும் அரிய சந்தர்ப்பத்தை தவறவிட வேண்டாம் என,

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் கேட்டுக்கொண்டுள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அனுப்பியுள்ள அவசர கடிதத்தில் அவர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அனுப்பியுள்ள அந்தக் கடிதத்தில் மனோ கணேசன் எம்.பி தெரிவித்துள்ளதாவது, Read more

சுற்றுலாப் பயணிகள் நேரடியாக ரயில் பயணச் சீட்டுக்களை கொள்வனவு செய்வதற்கு கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட பயணச் சீட்டு விற்பனை செய்யும் நிலையம் ஒன்று ஸ்தாபிக்கப்படவுள்ளது.

தனியார் சுற்றுலா நிறுவனங்கள் ரயில் பயணச் சீட்டுக்களை கொள்வனவு செய்து, அதிக விலையில் சுற்றுலாப் பயணிகளுக்கு விற்பதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கமையவே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக புகையிரத சேவைகள் இராஜாங்க அமைச்சர் சி.பி.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

கங்கண சூரிய கிரகணம்-

Posted by plotenewseditor on 26 December 2019
Posted in செய்திகள் 

சுமார் 10 வருடங்களின் பின்னர், இலங்கையில் இன்று பல்வேறு மாவட்டங்களில் ´கங்கண சூரிய கிரகணம்´ ஏற்பட்டது. இன்று காலை 8.09 மணியில் இருந்து முற்பகல் 11.21 வரை இந்த சூரிய கிரகணம் ஏற்பட்டது.

குறித்த சூரிய கிரகணம் மன்னார், யாழ்ப்பாணம் மற்றும் மலையகத்திலும் தெளிவாக காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சூரிய கிரகணத்தை பொது மக்கள் பார்வையிடுவதற்கான ஏற்பாடுகள் மற்றும் ஆய்வுகளை வானியலாராய்ச்சி திணைக்களத்தின் ஆதர் சி கிளாக் நிறுவனம் மேற்கொண்டிருந்தது.

வெகுஜன அமைப்புகளின் ஏற்பாட்டில் ‘சட்டவிரோத மண் அகழ்வைத் தடுப்போம்’ எனும் தொனிப்பொருளில் கவனயீர்ப்பு போராட்டம் நாளை இடம்பெறவுள்ளது.

யாழ். சாவகச்சேரி பேரூந்து தரிப்பிடத்தில் நாளைய தினம் (27-12-2019) மாலை மூன்று மணியளவில் கவனயீர்ப்பு போராட்டம் நாடாத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கட்சி வேறுபாடுகள் இன்றி அனைத்து மக்களையும் கலந்துகொள்ளுமாறு ஏற்பாட்டுக்குழு அழைப்பு விடுத்துள்ளது.

முன்னாள் அமைச்சர் ராஜித்த சேனாரத்னவை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்துமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றினால் பிறப்பிக்கப்பட்டுள்ள பிடியாணையை ரத்துச் செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மோசன் மனு மீளப்பெறப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் ராஜித்த சேனாரத்னவின் சட்டத்தரணியால் இன்று காலை குறித்த மோசன் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் Read more

களுபோவில போதனா வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வந்த நோயாளர் ஒருவர், ஆறாவது மாடியில் இருந்து விழுந்து இன்று உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வெள்ளவத்தை விஜேரத்னபுர மாவத்தையைச் சேர்ந்த முனியாண்டி சத்தியராஜ் என்ற 48 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். Read more