சுமார் 10 வருடங்களின் பின்னர், இலங்கையில் இன்று பல்வேறு மாவட்டங்களில் ´கங்கண சூரிய கிரகணம்´ ஏற்பட்டது. இன்று காலை 8.09 மணியில் இருந்து முற்பகல் 11.21 வரை இந்த சூரிய கிரகணம் ஏற்பட்டது.

குறித்த சூரிய கிரகணம் மன்னார், யாழ்ப்பாணம் மற்றும் மலையகத்திலும் தெளிவாக காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சூரிய கிரகணத்தை பொது மக்கள் பார்வையிடுவதற்கான ஏற்பாடுகள் மற்றும் ஆய்வுகளை வானியலாராய்ச்சி திணைக்களத்தின் ஆதர் சி கிளாக் நிறுவனம் மேற்கொண்டிருந்தது.