வெகுஜன அமைப்புகளின் ஏற்பாட்டில் ‘சட்டவிரோத மண் அகழ்வைத் தடுப்போம்’ எனும் தொனிப்பொருளில் கவனயீர்ப்பு போராட்டம் நாளை இடம்பெறவுள்ளது.

யாழ். சாவகச்சேரி பேரூந்து தரிப்பிடத்தில் நாளைய தினம் (27-12-2019) மாலை மூன்று மணியளவில் கவனயீர்ப்பு போராட்டம் நாடாத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கட்சி வேறுபாடுகள் இன்றி அனைத்து மக்களையும் கலந்துகொள்ளுமாறு ஏற்பாட்டுக்குழு அழைப்பு விடுத்துள்ளது.