Header image alt text

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் இன்றுமாலை 5மணியளவில் யாழ்ப்பாணம் மார்ட்டீன் வீதியில் அமைந்துள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமைச் செயலகத்தில் இடம்பெற்றது.

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பில் இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டது. இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் அதன் தலைவர் மாவை சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன், எஸ்.சிறீதரன் ஆகியோரும், புளொட் சார்பில் அதன் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், செயலாளர் சு.சதானந்தம், க.சிவநேசன், தா.லிங்கநாதன், வே.நல்லநாதர் ஆகியோரும், ரெலோ சார்பில் அதன் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், வினோநோகராதலிங்கம் உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டிருந்தார்கள். Read more

கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன, குற்றப்புலனாய்வு பிரிவினரால் (சி.ஐ.டி), இன்றுமாலை கைதுசெய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

வெள்ளை வான் விவகாரம் தொடர்பான ஊடகச் சந்திப்பொன்றை நடத்தி, பொய்யான தகவல்களை வழங்கினார் என்ற குற்றச்சாட்டின் பேரில், அவரைக் கைதுசெய்யுமாறு, கொழும்பு மேலதிக நீதவான் பண்டார நெலும்தெனியவினால், கடந்த 24ஆம் திகதியன்று, பிடியாணை பிறப்பிக்கப்பட்டு இருந்தது. Read more

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அரசாங்கத்தின் கீழ் நாட்டின் அனைத்து இன மக்களுக்கும் சட்டம் மற்றும் நீதியை நியாயமானதாக முன்னெடுப்பதே அரசாங்கத்தின் கொள்கையாகும்.

அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களும் அவ்வாறே அமைந்திருக்கும் என்று வாக்களித்த மற்றும் வாக்களிக்காத அனைவருக்கும் பொதுவாக தற்போதைய அரசாங்கம் சேவையாற்றுவதாகவும் நீதி மனித உரிமைகள் மற்றும் சட்ட மறுசீரமைப்பு அமைச்சர் நிமல் ஸ்ரீபாலடி சில்வா தெரிவித்தார். Read more

வவுனியா, போகஸ்வௌ இராணுவ முகாமில் பணிபுரியும் இராணுவ வீரர் ஒருவரை தாக்கி அவரின் துப்பாக்கியை பறித்துச் சென்ற சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

வவுனியா நீதவான் நீதிமன்றில் சந்தேகநபர்கள் நேற்று முற்படுத்தப்பட்ட பின்னர் எதிர்வரும் மாதம் 09 ஆம் திகதி வரை அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. Read more

வெள்ளை வேன் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இருவரும் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தால் ஜனவரி 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் இருவரும் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் இன்று முற்பகல் ஆஜர் படுத்தப்பட்டனர். குறித்த இரு சந்தேகநபர்களையும் எதிர்வரும் ஜனவரி 6ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். Read more

மன்னார் – மதவாச்சி பிரதான வீதி, உயிலங்குளம் சிறுநீலாசேனை பகுதியில் நேற்று இரவு குடும்பஸ்தர் ஒருவர் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியினால் சுடப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவர் 2 பிள்ளைகளின் தந்தையான மாரி தர்மராசா வயது (41) என தெரியவந்துள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது, குறித்த குடும்பஸ்தர் மனைவி பிள்ளைகளை பிறிந்து வாழ்ந்து வந்த நிலையில், உயிலங்குளம் சிறுநீலாசனை பகுதியில் தனிமையில் தங்கி இருந்து கூலி வேலை செய்து வந்துள்ளார். Read more

வடமாகாணத்தில் சட்டத்துக்கு புறம்பான முறையில் இடம்பெறும் மணல் அகழ்வினை தடுத்து நிறுத்துமாறு கோரி இன்றைய தினம் சாவகச்சேரியில் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

சாவகச்சேரி பஸ் நிலையம் முன்பாக இன்று மாலை இந்தப் போராட்டம் இடம்பெற்றுள்ளது. கடந்த இரு வாரங்களாக வடக்கு மாகாணத்தின் பல பகுதிகளிலும் சட்டத்துக்குப் புறம்பான மணல் அகழ்விற்கு எதிராக போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. Read more

யாழ். தென்மராட்சி சம்பாவெளி கெற்பேலி ஸ்ரீ செம்பவலஞ்சுளிப்பிள்ளையார் தேவஸ்தான அறநெறி பாடசாலையில் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு நேற்றையதினம் (26.12.2019) காலை 11.00மணியளவில் அறிநெறிப் பாடசாலையின் தலைவி தபோதினி அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

நிகழ்வில் புளொட் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன், தென்மராட்சி பிரதேச சபையின் உப தவிசாளர் செ.மயூரன், முன்னாள் நகரசபை உறுப்பினர் கிசோர், திரு. தேவன் Read more