தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் இன்றுமாலை 5மணியளவில் யாழ்ப்பாணம் மார்ட்டீன் வீதியில் அமைந்துள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமைச் செயலகத்தில் இடம்பெற்றது.
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பில் இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டது. இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் அதன் தலைவர் மாவை சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன், எஸ்.சிறீதரன் ஆகியோரும், புளொட் சார்பில் அதன் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், செயலாளர் சு.சதானந்தம், க.சிவநேசன், தா.லிங்கநாதன், வே.நல்லநாதர் ஆகியோரும், ரெலோ சார்பில் அதன் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், வினோநோகராதலிங்கம் உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டிருந்தார்கள்.