வவுனியா, போகஸ்வௌ இராணுவ முகாமில் பணிபுரியும் இராணுவ வீரர் ஒருவரை தாக்கி அவரின் துப்பாக்கியை பறித்துச் சென்ற சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

வவுனியா நீதவான் நீதிமன்றில் சந்தேகநபர்கள் நேற்று முற்படுத்தப்பட்ட பின்னர் எதிர்வரும் மாதம் 09 ஆம் திகதி வரை அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் இராணுவ வீரர் ஒருவரும் அவருக்கு உதவி புரிந்த மற்றுமொருவரும் கைது செய்யப்பட்ட நிலையில், பறித்துச் செல்லப்பட்ட துப்பாக்கியும் தோட்டாக்கள் அடங்கிய மெகசின் ஒன்றும் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டது.