தமிழகத்தின் பாம்பன் பகுதியில் இருந்து இலங்கை நோக்கி வருகைதந்தாக தெரிவிக்கப்படும் நான்கு அகதிகள் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக கடற்படை பேச்சாளர் லெப்டினட் கொமண்டர் இசுறு சூரியபண்டார தெரிவித்துள்ளார்.

சேலம் மற்றும் மண்டபம் முகாமில் தங்கியிருந்த நான்கு அகதிகள் இன்று இலங்கையை நோக்கி சட்டவிரோதமாக படகில் இலங்கையை நோக்கி வந்தாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. இவ்வாறு வருகை தந்தவர்கள் யாழ்.நெடுந்தீவு பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் அவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளதாகவும் தமிழக ஊடகங்கள் தெரிவித்திருந்தன.

இந்த நிலையில் கடற்படை பேச்சாளர் லெப்டினட் கொமண்டர் இசுறு சூரியபண்டாரவிட இது தொடர்பில் கூறுகையில், இந்தியாவில் இருந்து வருகைதந்தாக தெரிவிக்கப்படும் நான்கு அகதிகள் தொடர்பிலும் விசாரணைகள் இடம்பெறுவதாக கூறினார்.