Header image alt text

வடக்கு கிழக்கின் எட்டு மாவட்டகளிலும் உள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களினால் நாளை பாரிய கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்திற்கு முன்பாக நாளை முற்பகல் 10 மணியளவில் இந்த கவனயீரப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. குறித்த போராட்டத்தினை அடுத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் ஐக்கிய நாடுகள் சபைக்கு விசேட மகஜர் ஒன்றும் அனுப்பி வைக்கப்படவுள்ளது. Read more

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் புதிய தலைவராக கலாநிதி முதித விதானபதிரண நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழத்தின் தடயவியல் மருத்துவத் துறைக்கு நியமிக்கப்பட்ட முதலாவது பேராசியராவார். மேலும், இவர் அறிவியல் புத்தகங்கள் மற்றும் மருத்துவ ஆராய்ச்சி இதழ்களுக்கான பல கட்டுரைகளை எழுதியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பு விமான நிலையம், சர்வதேச விமான நிலையமாக அபிவிருத்தி செய்யப்படும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இந்த அபிவிருத்தி நடவடிக்கைக்கு இந்திய அரசாங்கத்தின் முழுமையான ஆதரவு கிடைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இலங்கையில் இந்திய உயர் ஸ்தானிகர் தரன்ஜித் சிங் மற்றும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் இது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. Read more

அடுத்த வருடத்தில் புதிதாக 8 ரயில்கள் சேவையில் இணைத்துக் கொள்ளப்படவிருப்பதாக இராஜாங்க அமைச்சர் சி.பி.ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

இவற்றில் 4 ரயில்கள் அடுத்த மாதம் சேவையில் ஈடுபடுத்தப்படும். ரயில் அனுமதிப்பத்திரத்தை வழங்குவதற்கான பணிகளைத் துரிப்படுத்துவதற்கு நவீன தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. Read more