வடக்கு கிழக்கின் எட்டு மாவட்டகளிலும் உள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களினால் நாளை பாரிய கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்திற்கு முன்பாக நாளை முற்பகல் 10 மணியளவில் இந்த கவனயீரப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. குறித்த போராட்டத்தினை அடுத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் ஐக்கிய நாடுகள் சபைக்கு விசேட மகஜர் ஒன்றும் அனுப்பி வைக்கப்படவுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இந்த விடயத்திற்கு தீர்வு வழங்க வேண்டுமெனவும் முன்னோக்கி செல்வதற்குரிய விடயங்களை கவனத்தில் கொள்ள வேண்டுமெனவும் காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.