தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் புதிய தலைவராக கலாநிதி முதித விதானபதிரண நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழத்தின் தடயவியல் மருத்துவத் துறைக்கு நியமிக்கப்பட்ட முதலாவது பேராசியராவார். மேலும், இவர் அறிவியல் புத்தகங்கள் மற்றும் மருத்துவ ஆராய்ச்சி இதழ்களுக்கான பல கட்டுரைகளை எழுதியுள்ளமை குறிப்பிடத்தக்கது.