அடுத்த வருடத்தில் புதிதாக 8 ரயில்கள் சேவையில் இணைத்துக் கொள்ளப்படவிருப்பதாக இராஜாங்க அமைச்சர் சி.பி.ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

இவற்றில் 4 ரயில்கள் அடுத்த மாதம் சேவையில் ஈடுபடுத்தப்படும். ரயில் அனுமதிப்பத்திரத்தை வழங்குவதற்கான பணிகளைத் துரிப்படுத்துவதற்கு நவீன தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. ரயில் சேவை தொடர்பான நேர அட்டவணை அனைத்து ரயில் நிலையங்களிலும் காட்சிப்படுத்தப்படவுள்ளன. இதற்காக இலத்திரனியல் பெயர்ப்பலகை பயன்படுத்தப்படவுள்ளமை விசேட அம்சமாகும். (அரசாங்க தகவல் திணைக்களம்)