விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சுவிஸ் தூதரகத்தின் பெண் அதிகாரி கானியா பெனிஸ்டர் பிரான்சிஸ்ஸை பிணையில் விடுதலை செய்ய கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.அதனடிப்படையில் 5 இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீர பிணைகளின் அடிப்படையில் அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரின் பிணையாளர்கள் இருவரின் வசிப்பிடத்தை உறுதி செய்யும் கிராம அதிகாரியின் சான்றிதலையும் சந்தேக நபரின் நிரந்தர இருப்பிடத்தை உறுதி செய்யும் கிராம அதிகாரியின் சான்றிதலையும் முன்வைக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அவரின் வசிக்கும் நிரந்தர முகவரியை நீதிமன்றத்திற்கு அறிவிக்காது மாற்றத்தை ஏற்படுத்த முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் அவருக்கு வெளிநாடு செல்ல தடை விதித்த நீதிமன்றம் அவருடைய கடவுச்சீட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்குமாறும் உத்தரவிட்டுள்ளது.