தேசிய அடையாள அட்டை, சாரதி அனுமதிப்பத்திரம், குடிவரவு மற்றும் குடியகழ்வு ஆவணங்கள், பிறப்பு மற்றும் இறப்பு பதிவு உள்ளிட்ட அனைத்து தனிப்பட்ட தகவல்களையும் ஒரே தேசிய தரவு மையத்தின் கீழ் சேகரிப்பது தொடர்பில் ஜனாதிபதி அவதானம் செலுத்தியுள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில், தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்ப அமைச்சின்  சிரேஷ்ட அதிகாரிகளுடன் இன்று (30) இடம்பெற்ற கலந்துரையாடலின்போது ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.

இதன் ஊடாக, வீணடிக்கப்படும் பொதுமக்களின் நேரம், பணம் மற்றும் சிரமங்கள் உள்ளிட்டவற்றை தவிர்த்துக்கொள்ள முடியும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.