முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனிடம் குற்றப்புலனாய்வு பிரிவினர் வாக்குமூலம் பெற்றுக்கொண்டுள்ளனர்.கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி கொழும்பு உள்ளிட்ட நாட்டில் எட்டு இடங்களில் இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதல்கள் தொடர்பிலேயே வாக்குமூலம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

அவரிடம் இன்று (30) முற்பகல் சுமார் 3 மணித்தியாலங்கள் வாக்குமூலம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.