வாழைச்சேனை, விபுலானந்தர் வீதியிலுள்ள உணவு விற்பனை நிலைய​மொன்று, நேற்று (29) தீக்கிரையாகியுள்ளதாக, வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.மேற்படி உணவு வியாபார நிலையத்துடன் கூடியதாக, தனது இருப்பிடமாகக் கொண்டு வசித்து வரும் எஸ்.துரைசாமி என்பவரது உணவகமே, தீயால் முற்றுமுழுதாக எரிந்துள்ளது.

இதனால் வியாபார உடமைகள், தனது பிச்சை சம்பளம் பெறும் அட்டை, தேசிய அடையாள அட்டை, சிறுதொகைப் பணம் உட்பட்ட தனது அனைத்து ஆவணங்களும் உடைமைகளும் எரிந்துள்ளதாக, உரிமையாளர் தெரிவித்தார்.

இந்தச் சம்பவம், விபத்தா அல்லது ஏதேனும் நாசக்கார வேலையா என்பது ​ தொடர்பில், மேற்கொள்ளப்பட்டுள்ள முறைப்பாட்டுக்கமைய, வாழைச்சேனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.