தேர்தல் கட்டுப்பணத்தை அதிகரிக்காவிடின் பாரிய நெருக்கடியை சந்திக்க வேண்டுமென தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

நாட்டில் அடுத்து நடைபெறவுள்ள பொதுத்தேர்தல் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், எதிர்வரும் பொதுத்தேர்தலில் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் அதிகளவில் களமிறங்குவார்கள்.எனவே கட்டுப்பணத்தை அதிகரிக்காவிடின் பாரிய நெருக்கடியை சந்திக்க நேரிடும். ஜனாதிபதி தேர்தலைப் போன்று பாரிய சிக்கல்களுக்கு முகங்கொடுக்க நேரிடும்.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் 35 வேட்பாளர்கள் களமிறங்கியமையினால் மேலதிகமாக பாரிய தொகையை செலவிட நேரிட்டது. தற்போது பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் 70 உள்ளன. எனவே கட்டுப்பணத்துக்கான தொகையை அதிகரிக்க வேண்டும் என்றார்.