வவுனியா, ஈச்சன்குளம் பகுதியில் கிணறு ஒன்றில் இருந்து ஒரு வயது மதிக்கதக்க பெண் குழந்தை ஒன்றின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.குழந்தையின் சடலத்தை நேற்று (29) இரவு கண்டெடுத்தாக ஈச்சன்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.

குழந்தையை வீட்டில் காணவில்லை என குழந்தையின் தாய் செய்த முறைப்பாட்டுக்கமைய மேற்கொண்ட தேடுதலின் போது குழந்தை கிணற்றுக்குள் விழுந்திருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.

குழந்தையை அதன் தந்தை கடத்தியதாகவும் தாயார் முறையிட்டிருந்தார்.

குழந்தையில் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக வவுனியா வைத்தியாசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

குழந்தையின் உயிரிழப்புக்கான உண்மையான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், ஈச்சன்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.