இன்று அதிகாலை 03.55 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் நான்கு விமானப்படை வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.வரகாபொல பகுதியில் ஓட்டோ மற்றும் கொள்கலன் வாகனம் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஓட்டோ சாரதிக்கு நித்திரை ஏற்பட்டதன் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் கொள்கலன் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் வரகாபொல பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.