Header image alt text

வாழைச்சேனை, விபுலானந்தர் வீதியிலுள்ள உணவு விற்பனை நிலைய​மொன்று, நேற்று (29) தீக்கிரையாகியுள்ளதாக, வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர். Read more

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனிடம் குற்றப்புலனாய்வு பிரிவினர் வாக்குமூலம் பெற்றுக்கொண்டுள்ளனர். Read more

தேசிய அடையாள அட்டை, சாரதி அனுமதிப்பத்திரம், குடிவரவு மற்றும் குடியகழ்வு ஆவணங்கள், பிறப்பு மற்றும் இறப்பு பதிவு உள்ளிட்ட அனைத்து தனிப்பட்ட தகவல்களையும் Read more

வட மாகாண ஆளுநராக, சுகாதார அமைச்சின் செயலாளர் திருமதி.பி.எஸ்.எம்.சாள்ஸ், இன்று(30) பதவிப் பிரமாணம் செய்துள்ளார். Read more

தேர்தல் கட்டுப்பணத்தை அதிகரிக்காவிடின் பாரிய நெருக்கடியை சந்திக்க வேண்டுமென தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

நாட்டில் அடுத்து நடைபெறவுள்ள பொதுத்தேர்தல் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், எதிர்வரும் பொதுத்தேர்தலில் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் அதிகளவில் களமிறங்குவார்கள். Read more

உயர்தர பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களை 6 மாத காலப்பகுதிக்குள் பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்குவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக உயர் கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுடன் கலந்துரையாடியுள்ளதாகவும் கூறியுள்ளார்.

எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதியில் இருந்து சத்தம் குறைவாக பாடல்களை இசைக்காத தனியார் பேருந்துகள் தொடர்பில் முறைப்பாடு செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பில் 1955 என்ற இலக்கத்திற்கு தொடர்புகொண்டு முறைப்பாடு செய்ய முடியும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இலங்கை போக்குவரத்து ஆணைக்குழு பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது. Read more

மட்டக்களப்பு வாகரை சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவில் கடந்த 25 ஆம் திகதி தாய்ப்பால் ஊட்டத் தயாரானபோது மரணித்த நிலையில் காணப்பட்ட குழந்தையின் சடலம் 5 நாட்கள் கடந்த நிலையிலும்

சட்ட வைத்திய பரிசோதனை நடத்தப்படாமல் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி வடிவேல் ரமேஷ் ஆனந்தன் தெரிவித்தார். Read more

வடக்கு கிழக்கின் எட்டு மாவட்டகளிலும் உள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களினால் நாளை பாரிய கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்திற்கு முன்பாக நாளை முற்பகல் 10 மணியளவில் இந்த கவனயீரப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. குறித்த போராட்டத்தினை அடுத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் ஐக்கிய நாடுகள் சபைக்கு விசேட மகஜர் ஒன்றும் அனுப்பி வைக்கப்படவுள்ளது. Read more

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் புதிய தலைவராக கலாநிதி முதித விதானபதிரண நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழத்தின் தடயவியல் மருத்துவத் துறைக்கு நியமிக்கப்பட்ட முதலாவது பேராசியராவார். மேலும், இவர் அறிவியல் புத்தகங்கள் மற்றும் மருத்துவ ஆராய்ச்சி இதழ்களுக்கான பல கட்டுரைகளை எழுதியுள்ளமை குறிப்பிடத்தக்கது.