Header image alt text

என்றும் தோழமையுடனான வணக்கங்களும், வாழ்த்துகளும்.

கழகத்திற்கு காட்டிய வழியிலும், கழகம் காட்டிய வழியிலும், தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுக்க புறப்பட்டு தம்முயிரைத் தியாகம் செய்தவர்களின் விபரங்களை ஆவணப்படுத்த வேண்டிய ஒரு நீண்ட செயற்திட்டத்தின் மிகச் சிறிய, பகுதியான முயற்சியே 2020 ற்கான நாட்காட்டி.

இம் முயற்சியில் குறைபாடுகள் நிச்சயமாக இருக்கும். அவற்றை விமர்சிப்பதை விடுத்து நிறைவு செய்வதற்கான வழிவகைகளை கண்டறிவதற்கான செயற்பாடுகளை ஊக்கப்படுத்த அனைவரும் முன்வரவேண்டும்.

சர்வதேசக் கிளை உறுப்பினர்கள் சிலரின் சிந்தனையில் உருவான முயற்சியெனினும், அனைத்து நாடுகளில் இருந்தும் தாயகத்தில் இருந்தும் நாட்காட்டி தயாரிப்பிற்காக இறுதிக் கட்டங்களில் கிடைத்த ஒத்துழைப்பு மெச்சத்தக்கது. Read more

இலங்கைக்கும், சுவிட்சர்லாந்துக்கும் இடையிலான நல்லுறவு தொடர்ந்தும் வலுப்படுத்தப்பட வேண்டும் என்று இலங்கையில் உள்ள சுவிட்சர்லாந்து அலுவலகம் கோரியுள்ளது.

இலங்கையில் உள்ள சுவிட்சர்லாந்து தூதரகத்தின் அலுவலர் ஒருவர் கடத்தப்பட்டு அச்சுறுத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக கடந்த இரண்டு வாரங்களில் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளில் சில தளம்பல் நிலை ஏற்பட்டிருந்தது. Read more

2020 ஆண்டில் பாடசாலைகளின் முதலாம் தவணை நாளை ஆரம்பமாகவுள்ளது.

2019 ஆம் ஆண்டு கல்விப்பொதுத் தராதரப் பத்திர சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ள 37 பாடசாலைகள் நாளை திறக்கப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் கூறியுள்ளது. Read more

குவைத்துக்கு வேலைவாய்ப்பிற்காக சென்று அந்நாட்டில் துன்புறுத்தல்களுக்கு முகங்கொடுத்து பின்னர் அந்நாட்டு தூதரகத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த இலங்கை பெண்கள் 36 பேர் இன்று நாடு திரும்பியுள்ளனர்.

அவர்கள் அந்நாட்டில் வைத்து தங்களது வீட்டு எஜமான்களினால் துன்புறுத்தலுக்கு உள்ளானதாக தெரிவித்து குவைத்தில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு சென்றுள்ளனர். Read more

வவுனியா கல்குண்டாமடுவில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் 4பேர் காயமடைந்து வவுனியா பொது வைத்தியாசலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து இருந்து முல்லைத்தீவு நோக்கி சென்று கொண்டிருந்த ஹயஸ்ரக வாகனம் கட்டுப்பாட்டை இழந்து குளத்தினுள் விழுந்து மூழ்கியுள்ளது. Read more

கிளிநொச்சி கனகபுரம் வீதியில் இன்று அதிகாலை 4 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.

குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த வரதராஜா ஜெமினன்(23வயது) செல்வநாயகம் அஜிந்தன் (29வயது) ஆகியோரே பார ஊர்தியுடன் மோதுண்டதால் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. Read more

அடுப்பில் இருந்த சோற்றுப்பானை குழந்தை மீது வீழ்ந்ததில் 2 வயது பெண் குழந்தை இன்று உயிரிழந்துள்ளது.

இந்த சம்பவத்தில் யாழ்ப்பாணம் மானியம் தோட்டத்தை சேர்ந்த யசிந்தன் கஜலக்சி (வயது 2) என்ற குழந்தையே பரிதாபமாக உயிரிழந்துள்ளது. குறித்த குழந்தையின் வீட்டில் அவரது தாயார் கடந்த 23ஆம் திகதி நிலத்தில் மண்ணெண்ணெய் அடுப்பில் சோறு சமைத்துள்ளார். அப்போது அடுப்புக்கு அண்மையில் இந்த குழந்தையும் இருந்துள்ளது. Read more