என்றும் தோழமையுடனான வணக்கங்களும், வாழ்த்துகளும்.

கழகத்திற்கு காட்டிய வழியிலும், கழகம் காட்டிய வழியிலும், தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுக்க புறப்பட்டு தம்முயிரைத் தியாகம் செய்தவர்களின் விபரங்களை ஆவணப்படுத்த வேண்டிய ஒரு நீண்ட செயற்திட்டத்தின் மிகச் சிறிய, பகுதியான முயற்சியே 2020 ற்கான நாட்காட்டி.

இம் முயற்சியில் குறைபாடுகள் நிச்சயமாக இருக்கும். அவற்றை விமர்சிப்பதை விடுத்து நிறைவு செய்வதற்கான வழிவகைகளை கண்டறிவதற்கான செயற்பாடுகளை ஊக்கப்படுத்த அனைவரும் முன்வரவேண்டும்.

சர்வதேசக் கிளை உறுப்பினர்கள் சிலரின் சிந்தனையில் உருவான முயற்சியெனினும், அனைத்து நாடுகளில் இருந்தும் தாயகத்தில் இருந்தும் நாட்காட்டி தயாரிப்பிற்காக இறுதிக் கட்டங்களில் கிடைத்த ஒத்துழைப்பு மெச்சத்தக்கது.நாட்காட்டி உங்கள் கைகளில் கிடைக்க ஒரு சில நாட்களாகும் என்பதால் நாட்காட்டியின் முகப்பும் முதல் மாதப் பக்கமும் இங்கு பதிவேற்றம் செய்யப்படுகிறது.

நாட்காட்டிக்கு கிடைக்கும் ஆதரவைப் பொறுத்து ஆவணமாக்கலின் அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி முடிவு செய்யப்படும். அடுத்த ஆவணம், மரணித்த தோழர்கள் பற்றிய மிகப் பிந்திய விரிவானதொரு ஆவணமாக அமையவேண்டும் என்பதே எதிர்பார்ப்பாகும்.

நாட்காட்டித் தயாரிப்பில் பங்குகொண்ட அனைவரினதும் பங்களிப்பு பற்றிய விபரங்கள் விரைவில் அறியத்தரப்படும்.

தெளிவான இலக்குடனும் உறுதியான சிந்தனையுடனும் சாத்தியமான அணுகுமுறைகளுடனும் 2020 ஐ வரவேற்போம்.