அடுப்பில் இருந்த சோற்றுப்பானை குழந்தை மீது வீழ்ந்ததில் 2 வயது பெண் குழந்தை இன்று உயிரிழந்துள்ளது.

இந்த சம்பவத்தில் யாழ்ப்பாணம் மானியம் தோட்டத்தை சேர்ந்த யசிந்தன் கஜலக்சி (வயது 2) என்ற குழந்தையே பரிதாபமாக உயிரிழந்துள்ளது. குறித்த குழந்தையின் வீட்டில் அவரது தாயார் கடந்த 23ஆம் திகதி நிலத்தில் மண்ணெண்ணெய் அடுப்பில் சோறு சமைத்துள்ளார். அப்போது அடுப்புக்கு அண்மையில் இந்த குழந்தையும் இருந்துள்ளது. குழந்தை எதிர்பாராத விதமாக அடிப்பினை காலால் உதைந்துள்ளது. இதனால் அடுப்பில் கொதி நிலையில் இருந்த சோற்றுப் பானை குழந்தை மீது வீழந்துள்ளது.

இதனால் குழந்தையின் உடம்பு முழுவதும் சூட்டுக் காயம் ஏற்பட்டுள்ளது. காயமடைந்த குழந்தையை உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.