2020 ஆண்டில் பாடசாலைகளின் முதலாம் தவணை நாளை ஆரம்பமாகவுள்ளது.

2019 ஆம் ஆண்டு கல்விப்பொதுத் தராதரப் பத்திர சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ள 37 பாடசாலைகள் நாளை திறக்கப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் கூறியுள்ளது. குறித்த பணிகள் 84 பாடசாலைகளில் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், ஏனைய 47 பாடசாலைகளும் எதிர்வரும் 6ஆம் திகதி திறக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முதற்கட்ட விடைத்தாள் திருத்தும் பணிகள் டிசெம்பர் 26 ஆம் திகதி ஆரம்பமான நிலையில், ஜனவரி 4ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது