கிழக்கு மாகாணத்தின் புதிய உதவி பொலிஸ் மா அதிபராக நிலந்த ஜெயவர்தன தனது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார். மட்டக்களப்பிலுள்ள கிழக்கு மாகாண உதவி பொலிஸ் மா அதிபர் காரியாலயத்தில் நேற்று இந்நிகழ்வு நடைபெற்றது.

கிழக்கு மாகாணத்தின் உதவி பொலிஸ் மா அதிபராக இதுவரை கடமையிலிருந்த கபில ஜெயசேகரா, 2019 நவம்பர் மாதம் 20ஆம் திகதி ஒய்வுபெற்றுச் சென்றிருந்தார். அதன்பின்னர் அந்த வெற்றிடத்துக்கு உதவிப் பொலிஸ் மா அதிபராக லலித் பத்திநாயக்க கடமைகளைப் பெறுப்பேற்று, அவரும் 2019 டிசெம்பர் 30ஆம் திகதி இடமாற்றம் பெற்றுச் சென்றார். அதனையடுத்து, அந்த வெற்றிடத்துக்கு உதவிப் பொலிஸ் மா அதிபராக நிலந்த ஜெயவர்தன நியமிக்கப்பட்டார்.