ஹப்புத்தளை, பகுதியில் இன்று காலை உடைந்து விழுந்த ஹெலியில் பயணித்த நால்வர் உயிரிழந்துள்ளதாக ஹப்புத்தளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விமானப்படைக்கு சொந்தமான Y12 ரக விமானமே விபத்துக்குள்ளானதாக விமானப்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார். வீரவில பகுதியிலிருந்து பயணித்த நிலையில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. விமான விபத்தின்போது, அருகிலிருந்த வீட்டில் வசித்த பெண் காயமடைந்து ஹப்புத்தளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஹெலிகொப்டர் உடைந்து விழுந்த பிரதேசம் பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேற்படி விமான விபத்து தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஷ, விமானம் தாழ்வாகப் பறந்தமையே விபத்துக்குக் காரணமென கூறியுள்ளார்.