Header image alt text

ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க மாதிவெலயில் அமைந்துள்ள அவரின் வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

நீதிமன்ற தேடுதல் ஆணையின் படி பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் மாதிவெல வீட்டுக்கு இன்று பிற்பகல் 3.00 மணியளவில் சென்ற மேல் மாகாண தென் பிராந்திய குற்றவியல் பிரிவின் அதிகாரிகள் அங்கு சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். Read more

தேர்தல் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய மன்னார் மாவட்ட தேர்தல் திணைக்களத்துக்கு இன்று காலை திடீர் விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார்.

ஜனாதிபதி தேர்தல் தொடர்பான அறிக்கைகள் மற்றும் ஆவணங்களை சமர்ப்பித்தல் தொடர்பாகவும் குறித்த தேர்தலோடு பணியாற்றிய அதிகாரிகளை சந்திக்கும் முகமாகவும் அவரின் மன்னார் விஜயம் அமைந்திருந்தது. Read more

கிளிநொச்சி மலையாளபுரம் புதுஜயன்குளத்தின் அணைக்கட்டின் கீழ் பகுதியில் பலத்த வெட்டுக்காயங்களுடன் ஆணொருவரின் சடலம் கடந்த 30ம் திகதி இரவு 11.30 மீட்கப்பட்டுள்ளது.

குறித்த நபரை கத்தியால் வெட்டி கொலை செய்த குற்றச்சாட்டில் கிளிநொச்சி கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த ஐந்து இளைஞர்கள் கிளிநொச்சி குற்றத்தடுப்பு பிரிவு பொலிசார் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். Read more

மட்டக்களப்பு வெல்லாவெளியில் உடல் வலிக்கு தடவும் தைலத்தை அருந்தி ஒன்றரை வயது ஆண் குழந்தை பலியாகியுள்ளது.

வெல்லாவெளி தம்பலவத்தை பகுதியில் கடந்த கடந்த புத்தாண்டு அன்று மாலை பெரியவர்கள் உடல் வலிக்கு பயன்படுத்தும் தைலத்தை அருந்தியதால் மயக்க நிலை அடைந்த குழந்தை கல்முனை வடக்கு ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டது. Read more

வவுனியாவில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் தங்களின் பிள்ளைகள், சகோதரர்கள் தாங்கள் இறப்பதற்கு முன் தங்கள் கைகளில் தேவையெனக் கூறி ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

வவுனியா வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக கடந்த 1050 நாட்களாகப் போராடிவரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களாலேயே குறித்த ஆர்ப்பாட்டம் இன்று மதியம் 12.30 மணியளவில் முன்னெடுக்கப்பட்டது. Read more

‘பாதுகாப்பான தேசம் – வளமான நாடு’ என்ற தெனிப்பொருளில் 72 ஆவது சுதந்திர தின நிகழ்வு கொழும்பு சுதந்திர சதுக்க வளாகத்தில் நடாத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

பிரதமர் மகிந்த ராஜபக்ஸ தலைமையில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தொனிப்பொருளுக்கு பொருத்தமான கலாசார நிகழ்வுகள் மாத்திரமே அதில் இணைப்பதற்கு அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. Read more

வெளிநாட்டு உறவுகள் அமைச்சர் தினேஸ் குணவர்தன இந்தியாவுக்கான இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.

இந்த மாதம் 9, 10ஆம் திகதியே இவர் இந்தியாவுக்கு விஜயம் செய்யவுள்ளாரென்றும் இவர் அமைச்சராகப் பதவியேற்றதன் பின்னர் செல்லும் முதலாவது வெளிநாட்டு விஜயம் இதுவென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நான்கு பிரதி பொலிஸ் மா அதிபர்கள் உட்பட 43 பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

சேவைத் தேவையின் அடிப்படையில் பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன் இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. பிரதி பொலிஸ் மா அதிபர்களுக்கு மேலதிகமாக இடமாற்றம் வழங்கப்பட்டவர்களுள் நான்கு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களும் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. Read more

யாழ்ப்பாணம் புங்குடுதீவில் பாழடைந்த கிணற்றிலிருந்து ஆண் சிசுவின் சடலம் நேற்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸ் நிலைய தொலைப்பேசி இலக்கத்திற்குக் கிடைத்த தகவலுக்கு அமைய, புங்குடுதீவு 11ஆம் வட்டாரத்திலுள்ள பாழடைந்த கிணற்றிலிருந்து சிசுவின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக ஊர்காவற்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர். Read more

யாழ். தொண்டைமானாறு செல்வச் சந்நதி முருகன் ஆலய கடற்பகுதியில் நீராடிய இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

நேற்று மதியம் 6 இளைஞர்கள் ஒன்றாக நீராடிய நிலையில் திடீரென ஒருவரை காணவில்லை என தேடியபோது, அவர் சேற்றில் புதைந்து இருக்கலாமென வல்வெட்டித்துறை பொலுஸாருக்கு அறிவித்தனர். Read more