‘பாதுகாப்பான தேசம் – வளமான நாடு’ என்ற தெனிப்பொருளில் 72 ஆவது சுதந்திர தின நிகழ்வு கொழும்பு சுதந்திர சதுக்க வளாகத்தில் நடாத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

பிரதமர் மகிந்த ராஜபக்ஸ தலைமையில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தொனிப்பொருளுக்கு பொருத்தமான கலாசார நிகழ்வுகள் மாத்திரமே அதில் இணைப்பதற்கு அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. சுதந்திர தினத்தில் அனைத்து வீடுகளிலும் தேசிய கொடி ஏற்றவும் நாடளாவிய ரீதியில் அனைத்து வீடுகளிலும் ஒரே நேரத்தில் பயனுள்ள மரக்கன்றை நாட்டுவதற்கு தேவையான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் பொதுமக்களுக்கு இடையூறின்றி நிகழ்வு இடம்பெறும் பிரதேசத்தில் பாதுகாப்பை உறுதிப்படுத்தல், போக்குவரத்தினை கையாளுதல் மற்றும் ஒத்திகை நடவடிக்கைகள் இடம்பெற வேண்டும் எனவும் பிரதமர் குறித்த கலந்துரையாடலின் போது அறிவுறுத்தியுள்ளார்