தேர்தல் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய மன்னார் மாவட்ட தேர்தல் திணைக்களத்துக்கு இன்று காலை திடீர் விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார்.

ஜனாதிபதி தேர்தல் தொடர்பான அறிக்கைகள் மற்றும் ஆவணங்களை சமர்ப்பித்தல் தொடர்பாகவும் குறித்த தேர்தலோடு பணியாற்றிய அதிகாரிகளை சந்திக்கும் முகமாகவும் அவரின் மன்னார் விஜயம் அமைந்திருந்தது. குறித்த கலந்துரையாடலில் மன்னார் மாவட்ட உதவி தேர்தல் அத்தியட்சகர் ஜெனிற்றன் , மன்னார் மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் பந்துல வீரசிங்க மற்றும் தேர்தல் திணைக்கள அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.