ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க மாதிவெலயில் அமைந்துள்ள அவரின் வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
நீதிமன்ற தேடுதல் ஆணையின் படி பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் மாதிவெல வீட்டுக்கு இன்று பிற்பகல் 3.00 மணியளவில் சென்ற மேல் மாகாண தென் பிராந்திய குற்றவியல் பிரிவின் அதிகாரிகள் அங்கு சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். இதன்போது, அனுமதிப்பத்திரம் காலாவதியாகியிருந்த நிலையில் பிஸ்டல் ஒன்றும் மேலும் சில பொருட்களும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. காலாவதியான பிஸ்டல் ஒன்றை வைத்திருந்தமைக்காக ரஞ்சன் ராமநாயக்க எம்.பி கைது செய்யப்பட்டுள்ளார்.