மட்டக்களப்பு வெல்லாவெளியில் உடல் வலிக்கு தடவும் தைலத்தை அருந்தி ஒன்றரை வயது ஆண் குழந்தை பலியாகியுள்ளது.

வெல்லாவெளி தம்பலவத்தை பகுதியில் கடந்த கடந்த புத்தாண்டு அன்று மாலை பெரியவர்கள் உடல் வலிக்கு பயன்படுத்தும் தைலத்தை அருந்தியதால் மயக்க நிலை அடைந்த குழந்தை கல்முனை வடக்கு ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டது. பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கண்டி போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்றிரவு குழந்தை உயிரிழந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தந்தையார் தொழில் நிமித்தம் மத்திய கிழக்கு சென்றுள்ள நிலையிலும், தாயார் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த வேளையிலும் உறவினர்களின் பராமரிப்பில் இருந்த சந்தர்பத்திலேயே இந்தக் குழந்தை உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.