பெண் ஒருவர் செலுத்திய கார் வேக கட்டுப்பாட்டை இழந்து பாதசாரிகள் மீது மோதியதில் மூவர் படுகாயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லடி பகுதியில் நேற்றுக் காலை இவ்விபத்து இடம்பெற்றதுடன் இவ்விபத்தில் படுகாயமடைந்தவர்களில் ஒருவர் உயிரிழந்த நிலையில் மற்றும் இருவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாக பொலிசார் தெரிவித்தனர். காத்தான்குடி போக்குவரத்துப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.