கிளிநொச்சி மலையாளபுரம் புதுஜயன்குளத்தின் அணைக்கட்டின் கீழ் பகுதியில் பலத்த வெட்டுக்காயங்களுடன் ஆணொருவரின் சடலம் கடந்த 30ம் திகதி இரவு 11.30 மீட்கப்பட்டுள்ளது.

குறித்த நபரை கத்தியால் வெட்டி கொலை செய்த குற்றச்சாட்டில் கிளிநொச்சி கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த ஐந்து இளைஞர்கள் கிளிநொச்சி குற்றத்தடுப்பு பிரிவு பொலிசார் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் கொலை செய்ய பயன்படுத்திய கத்தி மட்டும் தப்பித்து செல்ல பயன்படுத்திய 2 மோட்டார் சைக்கிள் என்பனவும் மீட்கப்பட்டுள்ளது. அத்தோடு மறைந்து உள்ளதாக தெரிவிக்கப்படும் மேலும் ஒரு சந்தேக நபரை பொலிஸார் தேடி வருகின்றனர்.